Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நிகழ்தகவு | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 9 : Probability

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

• ஒரு சோதனையின் மிகச் சரியான முடிவுகளை நாம் கணிக்க முடிந்தால் அது உறுதியான சோதனை என அழைக்கப்படுகிறது.

• ஒரு சோதனையின் மிகச் சரியான முடிவுகளை நாம் கணிக்க இயலவில்லை எனில் அது சம வாய்ப்புச் சோதனை என அழைக்கப்படுகிறது.

• ஒரு சமவாய்ப்பு சோதனையின் மொத்த விளைவுகளின் கணம், அச்சோதனையின் கூறுவெளி (S) எனப்படும்.

• ஒரு சோதனையின் ஒரு குறிப்பிட்ட விளைவோ அல்லது விளைவுகளின் தொகுப்போ நிகழ்ச்சி எனப்படும்.

• நிகழ்தகவின் ஒப்பீட்டு நிகழ்வெண் கோட்பாடு, ஒரு விளைவின் நிகழ்தகவானது அந்த விளைவு நடப்பதற்கான விழுக்காட்டிற்கு அருகில் இருக்கும் எனக் கூறுகிறது.

• நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஒரே மாதிரியாக இருந்தால் அவை சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் எனப்படுகின்றன.

• இரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்க இயலாது எனில் அவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

• P(E) + P(E') =1 எனில், நிகழ்வுகள் E மற்றும் E' ஆகியவை ஒன்றுக்கொன்று நிரப்பு நிகழ்ச்சிகள் எனப்படும்.

• ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும் எனில் அது உறுதியான நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவின் மதிப்பு சரியாக '1' ஆகும்.

• ஒரு நிகழ்ச்சி ஒரு போதும் நடைபெறாது எனில் அது இயலா நிகழ்ச்சி எனப்படுகிறது. இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவின் மதிப்பு சரியாக '0' ஆகும்.

 

இணையச் செயல்பாடு

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி 1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebra பக்கத்தில் “Probability” என்னும் பணித்தாளிற்குச் செல்க. 'Venn diagram and Basic probability' என்ற தலைப்பில் இரண்டு பணித்தாள்கள் உள்ளன.

படி  − 2

"New Problem" என்ற பகுதியில் சொடுக்கவும். தொடர்புடைய கட்டங்களைச் சொடுக்கி விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

செயல்பாட்டிற்கான உரலி :

நிகழ்தகவு : https://ggbm.at/mj887yua or Scan the QR Code.


Tags : Probability | Maths நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Points to Remember Probability | Maths in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு