Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

வடிவியல் | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 4 : Geometry

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

இணைகரத்தின் எதிர்ப்பக்கங்கள் மற்றும் எதிர்க் கோணங்கள் சமம். இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்.

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

• இணைகரத்தின் எதிர்ப்பக்கங்கள் மற்றும் எதிர்க் கோணங்கள் சமம். 

• இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும். 

• இணைகரத்தின் மூலைவிட்டங்கள் இணைகரத்தை இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கும். 

• ஒரு நாற்கரத்தின் எதிர்ப்பக்கங்கள் சமம் எனில் அது ஓர் இணைகரமாகும். 

• ஒரே அடிப்பக்கத்தையும் இரு இணைகோடுகளுக்கு இடையேயும் அமையும் இணைகரத்தின் பரப்புகள் சமம். 

• ஒரே அடிப்பக்கத்தையும் இரு இணைகோடுகளுக்கு இடையேயும் அமையும் முக்கோணத்தின் பரப்புகள் சமம். 

• இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில், அது ஒரு சாய்சதுரமாகும்.

• ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே ஒரே ஒரு வட்டம்தான் வரைய இயலும். 

• ஒரு வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் வட்ட மையத்தில் சம கோணங்களைத் தாங்கும். 

• வட்ட மையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து, அந்த நாணை இருசமக் கூறிடும். 

• ஒரு வட்டத்தில் உள்ள சம நாண்கள் வட்ட மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும்.

• ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும். 

• அரைவட்டத்தில் அமையும் கோணம் செங்கோணமாகும்.

• ஒரே வட்டத்துண்டில் அமையும் கோணங்கள் சமம். 

• வட்ட நாற்கரத்தின் ஒவ்வொரு சோடி எதிர் கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.

• வட்ட நாற்கரத்தின் ஒரு பக்கத்தை நீட்டிப்பதால் ஏற்படும் வெளிக்கோணம் உள்ளெதிர் கோணத்திற்குச் சமம்.


இணையச் செயல்பாடு −1

இறுதியில் கிடைக்கப்பெறும் படம் 


படி  − 1 

தேடுபொறியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உரலியைத் தட்டச்சு செய்க அல்லது துரித துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்க. 

படி  − 2

 “Properties: Parallelogram” என்று GeoGebra பக்கத்தில் தோன்றும் . அங்கு “Rotate” மற்றும் “Page” எனும் நழுவல் (slider) தோன்றும் 

படி  − 3

 “Rotate" எனும் நழுவலில் உள்ள கரும்புள்ளியை இழுக்க, முக்கோண வடிவம் இரட்டித்து இணைகர வடிவம் தோன்றும். 

படி  − 4 

“Page” எனும் நழுவலில் உள்ள கரும்புள்ளியை இழுக்க, இணைகரத்தின் மூன்று பண்புகள் விளக்கப்படும்.

செயல்பாட்டிற்கான உரலி : 

இணைகரத்தின் பண்புகள்: https://www.geogebra.org/m/m9Q2QpWD



இணையச் செயல்பாடு −2

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது  


படி  − 1 

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebra இன் "Angles in a circle" என்னும் பணித்தாளின் பக்கத்திற்குச் செல்க. இப்பணித்தாளில் வட்டம் குறித்த இரண்டு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

படி  − 2 

இரண்டாவது செயல்பாடு "Angles in the segment of a circle". B மற்றும் D புள்ளிகளை இழுத்து கோணங்களைச் சரிபார்க்க. மேலும் "Move" ஐக் கொண்டு வட்டத்தின் ஆரம் மற்றும் நாணின் நீளத்தை மாற்ற இயலும்.

செயல்பாட்டிற்கான உரலி : 

Angle in a circle: https://ggbm.at/yaNUhv9S or Scan the QR Code.


Tags : Geometry | Maths வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 4 : Geometry : Points to Remember Geometry | Maths in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல்