Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

கழிவு நீக்கம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 8 : Excretion

11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?

அ) பௌமானின் கிண்ணம்

ஆ) ஹென்லே வளைவின் நீளம்

இ) அண்மை சுருள் நுண்குழல்

ஈ) கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு

விடை : ஆ) ஹென்லே வளைவின் நீளம்


2. பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?

அ) சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது

ஆ) உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மாற்றமும் இல்லை

இ) சிறுநீர் மிகுந்த அடர்வுடையதாக இருக்கும் 

ஈ) சிறுநீர் நீர்த்துக் காணப்படும்

விடை : ஈ) சிறுநீர் நீர்த்துக் காணப்படும்


3. சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?

அ) தொடர் சிறுநீர் வெளியேற்றம்

ஆ) சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும்

இ) சிறுநீர் வெளியேற்றம்

ஈ) சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை.

விடை : அ) தொடர் சிறுநீர் வெளியேற்றம்


4. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?

அ) கார்பன் டைஆக்ஸைடு

ஆ) யூரிக் அமிலம்

இ) யூரியா

ஈ) அம்மோனியா

விடை :  இ) யூரியா


5. தவறான இணையைக் கண்டுபிடி.

அ) பௌமானின் கிண்ணம் -  கிளாமருலார் வடிகட்டுதல்

ஆ) சேய்மை சுருள் நுண்குழல் – குளுக்கோஸ் உறிஞ்சப்படுதல்

இ) ஹென்லேயின் வளைவு - சிறுநீர் அடர்வு

ஈ) அண்மை சுருள் நுண்குழல் - Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுதல்

விடை : ஈ) அண்மை சுருள் நுண்குழல் - Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுதல்


6. போடோ சைட்டுகள் காணப்படுவது.

அ) பௌமானின் கிண்ண வெளிச்சுவரில்

ஆ) பௌமானின் கிண்ண உட்சுவரில்

இ) நெஃப்ரானின் கழுத்துப் பகுதியில்

ஈ) கிளாமருலார் இரத்த நுண்நாளங்களின் சுவரில்

விடை : ஆ) பௌமானின் கிண்ண உட்சுவரில்


7. கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.

அ) இரத்தச் செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்

ஆ) சர்க்கரையற்ற பிளாஸ்மா

இ) புரதங்களைக் கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்

ஈ) யூரியாவற்ற இரத்தம்.

விடை : இ) புரதங்களைக் கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்


8. கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?

அ) சிலிக்கேட்டுகள்

ஆ) தாது உப்புகள்

இ) கால்சியம் கார்பனேட்

ஈ) கால்சியம் ஆக்சலேட்

விடை : ஈ) கால்சியம் ஆக்சலேட்


9. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள்.

அ) யூரியா நீக்கிகள்

ஆ) அம்மோனியா நீக்கிகள்

இ) யூரிக் அமில நீக்கிகள் 

ஈ) இரசாயன நீக்கிகள்

விடை : இ) யூரிக் அமில நீக்கிகள் 


10. சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது. 

அ) அக்குவாபோரின்கள்

ஆ) ஸ்பெக்ட்ரின்கள்

இ) குளுக்கோஸ் கடத்திகள்

ஈ) குளோரைடு கால்வாய்

விடை : அ) அக்குவாபோரின்கள்


11. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலுக்கு உதவும் ஹார்மோன்

அ) கோலிசிஸ்டோகைனின்

ஆ) ஆஞ்சியோடென்சின் II

இ) ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

ஈ) பான்கிரியோசைமின்

விடை : இ) ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்


12. மால்பீஜியன் நுண்குழல்கள் எதிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன.

அ) வாய்

ஆ) உணவுக்குழல்

இ) ஹீமோலிம்ப்

ஈ) உணவுப்பாதை (Alimentary canal)

விடை : இ) ஹீமோலிம்ப்

Tags : Excretion | Zoology கழிவு நீக்கம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 8 : Excretion : Choose the Correct Answers Excretion | Zoology in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம் : சரியான விடையை தெரிவு செய்க - கழிவு நீக்கம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 8 : கழிவு நீக்கம்