Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகியவற்றின் நீர் தேக்குதிறன் அறிதல்

சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் - தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகியவற்றின் நீர் தேக்குதிறன் அறிதல் | 12th Botany : Practicals

12 வது தாவரவியல் : செய்முறைகள்

தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகியவற்றின் நீர் தேக்குதிறன் அறிதல்

நோக்கம்: தோட்டமண் மற்றும் சாலையோர மண் ஆகிவற்றின் நீர் தேக்குத்திறனை அறிந்து கொள்ளுதல்.

சோதனைகள்


சோதனை எண் 22: தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகியவற்றின் நீர் தேக்குதிறன் அறிதல்

ஓரலகு மண்ணின் உலர் எடையின் புவியீர்ப்பு ஓட்டம் நிறுத்தப்படும் போது அது அதிகப்படியான தண்ணீ ரை தேக்க வைக்கும் தன்மைக்கு நீர் தேக்குத்திறன் அல்லது நிலத்தில் காணப்படும் மண்ணின் திறன் எனப்படும். நீர் தேக்குத் திறன் மண் துகள்களின் வகைகள் மற்றும் அதனிடையே காணப்படும் இடைவெளிகளைப் பொறுத்துப் பல்வேறு வகையான மண் வகைகளாக வேறுபடுகின்றன. பசளை மண் (loamy soil) மற்றும் களிமண்ணை விட மணல் மிகக் குறைவான நீர் தேக்குத் திறனைப் பெற்றுள்ளது.

நோக்கம்:

தோட்டமண் மற்றும் சாலையோர மண் ஆகிவற்றின் நீர் தேக்குத்திறனை அறிந்து கொள்ளுதல்.

தேவையானவை:

தோட்ட மண், சாலையோர மண், அளவிடும் உருளைகள், புனல், வடிகட்டும் தாள்கள், நீர் குடுவைகள், எடைக்கருவி, முதலியன.

செய்முறை:

இரண்டு புனல்களில் வடிகட்டும் தாள்களைப் பொருத்த வேண்டும். அவற்றை (அ) மற்றும் (ஆ ) எனக் குறித்துக் கொள்ள வேண்டும். புனல்களை அளவிடும் உருளையின் மீது வைக்க வேண்டும். 100 கிராம் உலர்ந்த, தோட்ட மற்றும் சாலையோர மண்மாதிரிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகிவற்றை (அ) மற்றும் (ஆ) எனக் குறிப்பிடப்பட்ட புனலில் இட வேண்டும். ஒவ்வொரு புனலிலும் 100 மி.லி. அளவு நீர் ஊற்ற வேண்டும். நீர் புனலிலிருந்து முழுமையாக வடிந்த பின் அளவிடும் உருளையில் காணப்படும் நீரின் அளவினைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


காண்பன:

பதிவுகளைக் கீழ்க்கண்ட அட்டவணையில் அட்டவணைப்படுத்தவும்:


அறிவன:

சாலையோர மண்ணில் அதிகளவு மணலும், வண்டல் மண்ணும் காணப்படுவதால், சாலையோர மண்ணை விடத் தோட்ட மண்ணின் நீர் தேக்குத்திறன் அதிகமாகக் காணப்படுகிறது.

முன்னெச்சரிக்கை:

1.மண் மாதிரிகளின் எடையினைத் துல்லியமாகச் செய்ய வேண்டும்.

2.புனலில் இருக்கும் மண்ணில் நீரினை மெதுவாக ஊற்ற வேண்டும்.

3.அளவீட்டு உருளையில் சேகரிக்கப்பட்ட நீரின் அளவினைக் கவனமாகப் பதிவிடல் வேண்டும்.

Tags : Experiments | Botany Practicals சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Water holding capacity of garden soil and roadside soil Experiments | Botany Practicals in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : தோட்ட மண் மற்றும் சாலையோர மண் ஆகியவற்றின் நீர் தேக்குதிறன் அறிதல் - சோதனைகள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்