Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | வேலையின்மையின் வகைகள்

பொருளாதரத்தில் வேலைவாய்ப்பு பற்றிய கோட்பாடுகள் - வேலையின்மையின் வகைகள் | 12th Economics : Chapter 3 : Theories of Employment and Income

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்

வேலையின்மையின் வகைகள்

வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும் தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.

வேலையின்மையின் வகைகள் (Types of Unemployment)

வேலையின்மை என்பது நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள், நிலவுகின்ற கூலி விகிதத்தில் வேலை செய்யத்தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும் தகுந்த வேலையில்லாத சூழ்நிலை வேலையின்மை ஆகும்.


இந்தியாவில் வேலையின்மை பிரச்சனையைச் சமாளிக்க கொள்கைகள் உருவாக்கும் போது வேலையின்மையின் வகைகளையும் தன்மைகளையும் அறிய வேண்டும். இந்திய கிராமப்புறங்களில் வேலையின்மையும் குறைவான வேலைவாய்ப்பும் (Underemployment) காணப்படுகின்றன கிராமங்களில் மறைமுக வேலையின்மை மற்றும் பருவகால வேலையின்மை நிலவுகிறது. நகர்புறங்களில் பிறழ்ச்சி வேலையின்மை, அமைப்பு சார் வேலையின்மை மற்றும் திறந்த வேலையின்மை நிலவுகிறது. நகர்மயமாதல் காரணமாக கிராமப்புற வேலையாட்கள் நகர்ப்புறங்களை நோக்கி செல்கின்றனர். இவ்வாறு கிராமபுற மக்கள் நகர்ந்து செல்வதால் நகர்புறங்களில் வேலையின்மை அதிகரிக்கிறது.





வேலையின்மையின் வகைகள்

வளர்ந்த நாடுகளில் வேலையின்மை என்பது தற்காலிகமாகவோ அல்லது பிறழ்ச்சியாகவோ இருக்கலாம். ஆனால் வளர்கின்ற நாடுகளில் மூலதன உருவாக்கம் குறைவாக இருப்பதால் அமைப்புசார்ந்த வேலையின்மை அதிகமாக இருக்கும். கீழ்கண்டவை வேலையின்மையின் வகைகள் ஆகும்.


வேலையின்மையின் வகைகள்

வாணிபச் சூழல் வேலையின்மை

பருவகால வேலையின்மை

தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை

கற்றோர் வேலையின்மை

தொழில் நுட்ப வேலையின்மை

அமைப்புசார் வேலையின்மை

மறைமுக வேலையின்மை




1. வாணிபச் சூழல் வேலையின்மை (Cyclical Unemployment)

கீழ்நோக்கிய பகுதியில் ஒரு பொருளாதாரம் இருக்கும் போது நிகழ்கின்ற வேலையின்மைக்கு சுழல் வேலையின்மை (Cyclical Unemployment) என்று பெயர். வாணிப சூழலின் பின்னிறக்க பகுதியில், உற்பத்தி மற்றும் வருமானம் குறைந்து வேலையின்மை அதிகரிக்கும். இது போதுமான அளவு விளைவுத் தேவை இல்லாத போது நிகழ்வதாகும். அரசு முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும், விரிவான பணவியல் கொள்கைகளைக் கடைப்பிடித்தும் இந்த சுழல் வேலையின்மையைக் குறைக்கலாம்.



2. பருவகால வேலையின்மை (Seasonal Unemployment)

ஒரு வருடத்தின் சில காலங்களில் மட்டும் நிலவும், வேலையின்மைக்கு பருவகால வேலையின்மை என்று பெயர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் (கரும்பு, பருத்தி) போன்றவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நடைபெறும். இத்தகைய தொழில்களில் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் வேலைவாய்ப்பு இருக்கும். மற்ற பருவங்களில் வேலையிருக்காது. எனவே அவற்றை நம்பி செயல்படும், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலையின்மை நிலை நிலவும். மக்களின் தேவை கூடுவதாலும் குறைவதாலும் பருவகால வேலையின்மை தோன்றும், உதாரணம், ஐஸ்கீரிம், விடுமுறைகால சுற்றுலாவின் தேவை குறைவதாலும் வேலைவாய்ப்பு குறையலாம்.



3. தற்காலிக அல்லது உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை  (Temporary Unemployment or Frictional Unemployment)

உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவுவதால் தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஏற்படுகிறது. உழைப்பாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயராமை, திறமை பற்றாக்குறை, இயந்திரங்களில் பழுது ஏற்படுதல், மூலப்பொருட்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உடன்பாடில்லா (பிறழ்ச்சி) வேலையின்மை ஏற்படுகிறது. வேலையை இழந்து புதிய வேலை தேடும் உழைப்பாளர்களும் இவ்வகையில் அடங்குவர்.



4. கற்றோர் வேலையின்மை (Educated Unemployment)

சில நேரங்களில் படித்து கல்வி தகுதி பெற்றவர்களுக்கு வேலைகிடைப்பது இல்லை அல்லது பகுதி நேர வேலை செய்கின்றனர். இத்தகைய வேலையின்மைக்கு கற்றோர் வேலையின்மை என்று பெயர். தவறான கல்வி முறை, வேலைக்கான திறன் பற்றாக்குறை அதிக அளவு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்டங்களை முடித்து வெளிவருதல், இலகுவான வேலையை மட்டுமே விரும்புதல் போன்ற காரணங்களால் பட்டம் பெற்றவர்களின் வேலையின்மை கூடுகிறது.



5. தொழில் நுட்ப வேலையின்மை (Technical Unemployment)

புதிய தொழில்நுட்பம் மூலதன செறிவு உடையதாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். புதியன கண்டுபிடித்தலும் புதிய கருத்துக்களும் வேலைவாய்ப்பினை உருவாக்கும். ஆனால் உழைப்பை சேமிக்கின்ற புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வேலையின்மையை உருவாக்கும்.



6. அமைப்புசார் வேலையின்மை (Structural Unemployment)

சமூக அமைப்பில் ஏற்படும் பெரிய மாற்றங்களால் அமைப்புசார் வேலையின்மை உருவாகிறது. ஒரு பொருளுக்கான தேவை குறைதல் (Eg. Type Machine, Taperecordeas, Radios, Camera etc) அல்லது பிற பொருள்களின் தேவை அதிகரித்தல் இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை ஆகியவையும் இவ்வகை வேலையின்மைக்கு காரணமாகிறது. உதாரணமாக, கைபேசியின் தேவை அதிகரித்ததால், கேமராவின் தேவை மற்றும் டேப் ரெக்கார்டர்களின் தேவை குறைந்துள்ளது. இந்தியாவில் மூலதன பற்றாக்குறையால் மக்கள் வேலையின்றி இருக்கின்றனர்.



7. மறைமுக வேலையின்மை (Disguised Unemployment)


தேவைக்கு அதிகமானவர்கள் ஒரு வேலையில் இருந்தால் அது மறைமுக வேலையின்மையாகும். (உதாரணம் - விவசாயத்துறை). இவ்வேலைகளில் சிலர் வேலையை விட்டு விலகினாலும், உற்பத்தி பாதிக்காது. உற்பத்தியில் அவர்களின் பங்கு குறைவாக இருக்கும். வேலையில்லாததாலேயே, தெரிந்தும் அதிகமானோர் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகைய வேலையின்மையால் உழைப்பாளரின் இறுதிநிலை உற்பத்தி திறன் பூஜ்யமாகவோ, குறைவாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கும்.


Tags : Theories of Employment in Economics பொருளாதரத்தில் வேலைவாய்ப்பு பற்றிய கோட்பாடுகள்.
12th Economics : Chapter 3 : Theories of Employment and Income : Unemployment and its types Theories of Employment in Economics in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் : வேலையின்மையின் வகைகள் - பொருளாதரத்தில் வேலைவாய்ப்பு பற்றிய கோட்பாடுகள் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 3 : வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்