Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - முகலாயப் பேரரசு

முகலாயப் பேரரசு - பாடச் சுருக்கம் - முகலாயப் பேரரசு | 11th History : Chapter 14 : The Mughal Empire

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

பாடச் சுருக்கம் - முகலாயப் பேரரசு

முகலாய வம்சத்தின் ஆட்சியை நிறுவ பாபர் செய்த நான்கு போர்கள் விளக்கப்பட்டுள்ளன.

பாடச் சுருக்கம்

முகலாய வம்சத்தின் ஆட்சியை நிறுவ பாபர் செய்த நான்கு போர்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஹுமாயூனுக்குச் சகோதரர்களால் ஏற்பட்ட இடையூறுகள், ஆப்கானியர், குஜராத்தின் பகதூர்ஷா ஆகியோரின் பகைமை சூர் அரச வம்சத்தின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது விளக்கப்பட்டுள்ளது.

ஷெர்ஷாவின் எழுச்சியும் அவருடைய வருவாய், நிதி சீர்திருத்தங்களும் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன.

அக்பரின் மன்சப்தாரிமுறை, அனைவரையும் அரவணைக்கும் மதக் கொள்கை, படையெடுப்புகளின் மூலம் முகலாய ஆட்சியை ஒருங்கிணைத்தது, முக்கியமாக இரண்டாவது பானிப்பட் போர் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

அரசு நிர்வாகத்தில் ஜஹாங்கீரின் நாட்டமின்மையால் நூர்ஜகான் உண்மையான ஆட்சியாளராகச் செயல்பட்டமை விவாதிக்கப்பட்டுள்ளது.

முகலாயக் கட்டடக் கலையின் அடையாளமான ஷாஜகானின் தாஜ்மஹால், அவரின் மூன்று மகன்களிடையே நடைபெற்ற வாரிசு உரிமைப் போரும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஒளரங்கசீப்பின் தலைமையிலான முகலாயருக்கும் சிவாஜியின் தலைமையிலான மராத்தியருக்கும் நடைபெற்ற இடைவிடாத போர்களும், ஒளரங்கசீப்பின் ரஜபுத்திர, தக்காணக் கொள்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன

முகலாயச் சமூகத்தின் சிறப்பியல்புகள் விளக்கப்பட்டுள்ளன.

Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Summary of Mughal Empire The Mughal Empire in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : பாடச் சுருக்கம் - முகலாயப் பேரரசு - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு