Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பாடச் சுருக்கம் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

வரலாறு - பாடச் சுருக்கம் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் | 11th History : Chapter 4 : Emergence of State and Empire

11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

பாடச் சுருக்கம் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர் பிம்பிசாரர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் அஜாதசத்ரு ஆட்சி செய்தார். மஹாபத்ம நந்தர் நந்தவம்சத்தை உருவாக்கினார்.

பாடச் சுருக்கம்

கண் - சங்கங்கள் காலப்போக்கில் பெரிய மகாஜனபதங்களாகவும், 16 அரசுகளாகவும் மாறின. மகதம் நாளடைவில் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறியது.

மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர் பிம்பிசாரர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் அஜாதசத்ரு ஆட்சி செய்தார். மஹாபத்ம நந்தர் நந்தவம்சத்தை உருவாக்கினார்.

பொ..மு. 326 இல் வடமேற்கு இந்தியா மீதான அலெக்சாண்டரின் படையெடுப்பு மேற்குலகின் வணிகத்தைத் திறந்துவிட்டது. அலெக்சாண்டரின் மரணத்திற்குப் பிறகு, சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார்.

மௌரியப் பேரரசர்களில் குறிப்பிடத்தகுந்த மூவரான சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர் ஆகியோர் மையப்படுத்தப்பட்ட அரசை நிறுவினார்கள். அர்த்த சாஸ்திரம், இண்டிகா ஆகிய நூல்கள் மூலம் மௌரிய நிர்வாக அமைப்பு பற்றித் தெரிய வருகிறது.

இக்காலகட்டத்தில் வணிகம் பன்மடங்கு வளர்ந்ததால், மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு புதிய காலகட்டத்தை உருவாக்கியது எனலாம்.

மௌரியப் பேரரசு நாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல் ஆகிய பழைய மரபுகளைத் தொடர்ந்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட புரட்சிகர மாற்றத்திற்கான முயற்சி யாதெனில், அசோகர் தனது அதிகாரிகளையும், மக்களையும் தம்மத்தைப் பின்பற்றுமாறும், வன்முறையைத் தவிர்த்து ஒழுக்கமான வாழ்க்கை வாழுமாறும் கேட்டுக் கொண்டதாகும்.

தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, மையத்திலிருந்து நிர்வகிக்கப்பட்ட, ஒரு பெரிய நவீன அரசை உருவாக்கியது. இதன் காரணமாக மௌரியப் பேரரசு இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 4 : Emergence of State and Empire : Summary - Emergence of State and Empire History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் : பாடச் சுருக்கம் - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 4 : அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்