Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள்

உலோகங்கள் பொதுவாக கடினமான, பிரகாசமான, கம்பியாக நீட்டக்கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, உருகக்கூடிய மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக் கூடிய தன்மையுடையவை.

உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள்

 

1. உலோகங்கள்

உலோகங்கள் பொதுவாக கடினமான, பிரகாசமான, கம்பியாக நீட்டக்கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, உருகக்கூடிய மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக் கூடிய தன்மையுடையவை. பாதரசத்தைத் தவிர எல்லா உலோகங்களும் அறை வெப்ப நிலையில் திண்மமாகவே இருக்கும். இவை தனிம வரிசை அட்டவணையில் பெரிய இடத்தைக் கொண்டுள்ளன. இவை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

) கார உலோகங்கள். .கா: லித்தியம் முதல் ப்ரான்சியம் வரை.

) கார மண் உலோகங்கள். .கா: பெரலியம் முதல் ரேடியம் வரை.

) இடைநிலை உலோகங்கள். .கா: தொகுதி 3 முதல் 12 வரை

) p தொகுதி தனிமங்கள். .கா: A1, Ga, In, TI, Sn, Pb மற்றும் Bi.

 

2. அலோகங்கள்

அலோகமானது பளபளப்பற்ற,மென்மையான, கம்பியாக நீட்ட முடியாத, தகடாக அடிக்க முடியாத, மின்சாரத்தைக் கடத்தாத தன்மையுடையது. வேறுவிதமாகக் கூறினால், உலோகப் பண்பு இல்லாத தனிமங்கள் யாவுமே அலோகங்களாகும் .கா: அலோகங்கள் p தொகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. p தொகுதி அலோகங்கள்: C, N, O, P, S, Se, ஹேலஜன்க ள் (F, Cl, Br மற்றும் I) மற்றும் மந்த வாயுக்கள் (He - Rn).

 

3. உலோகப் போலிகள்

உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டவை உலோகப் போலிகளாகும். .கா. போரான், ஆர்செனிக்.

9th Science : Periodic classification of Elements : Metals, Non-Metals and Metalloids in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை : உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் - : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை