சுற்றுச்சூழல் பொருளியல் - பசுமை முயற்சிகள் | 12th Economics : Chapter 10 : Environmental Economics
பசுமை முயற்சிகள்

இன்று உலகளவில் அதிக நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் மக்கள் நீடித்த நிலையான மேம்பாட்டிற்காகவும் சூழல்நட்பு வாழ்க்கை முறைகளையும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. வாழ்க்கைக்கு ஆதாரமான பூமியைப் பாதுகாப்பதில் உறுதி கொண்டுள்ளனர். எனவே அரசியல் மூலமாகவும் குடிமக்கள் செயல்பாட்டாலும் நுகர்வோர் அழுத்தத்தாலும் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அமைதியான முறையில் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பூமியைப் பாதுகாப்பதோடு பசமையான அமைதியான எதிர்காலத்திற்கும் தீர்வு காணவேண்டும். புவி வெப்பமயமாதல் உலகளாவிய பிரச்சனை என்பதால் மாசுபடுத்திய வளர்ச்சியடைந்த நாடுகள் மாசுக்கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கான செலவினை ஏற்க வேண்டும்.