Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | ஒற்றைநிற ஒளியின் அலைநீளத்தைக் காண்பதற்கான சோதனை

மாறுபாடு - ஒற்றைநிற ஒளியின் அலைநீளத்தைக் காண்பதற்கான சோதனை | 12th Physics : UNIT 7 : Wave Optics

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

ஒற்றைநிற ஒளியின் அலைநீளத்தைக் காண்பதற்கான சோதனை

விளிம்பு விளைவுக் கீற்றணி மற்றும் நிறமாலைமாணியைக் கொண்டு நிறமாலைவரியின் அலைநீளத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம்.

ஒற்றைநிற ஒளியின் அலைநீளத்தைக் காண்பதற்கான சோதனை

விளிம்பு விளைவுக் கீற்றணி மற்றும் நிறமாலைமாணியைக் கொண்டு நிறமாலைவரியின் அலைநீளத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம். நிறமாலைமானியின் தொடக்க சீரமைப்புகளை சரிசெய்ய வேண்டும். அலைநீளம் காணவேண்டிய ஒற்றை நிற ஒளியினால் இணையாக்கியின் பிளவினை ஒளியூட்டவேண்டும். தொலைநோக்கியினை இணையாக்கிக்கு நேராக அமைத்துப் பிளவின் நேரடி பிம்பத்தினைக் காணவேண்டும் இணையாக்கிலிருந்து வரும் படும் ஒளி அலைக்குச் செங்குத்தாக உள்ளவாறு விளிம்பு விளைவுக் கீற்றணியை முப்பட்டக மேடைமீது அமைக்க வேண்டும். முதல் வரிசை விளிம்பு விளைவு பிம்பம், தொலைநோக்கியில் உள்ள கண்ணருகு வில்லையின் செங்குத்துக் குறுக்குக்கம்பியுடன் ஒன்றிணையும் வகையில் தொலை நோக்கியினை ஒரு பக்கமாகச் சுழற்றவேண்டும். தொலைநோக்கி அமைந்துள்ள நிலைக்கான குறித்துக்கொள்ள வேண்டும்.


இதேபோன்று மற்றொரு பக்கமாக தொலைநோக்கியைச் சுற்றி முதல்வரிசை விளிம்பு விளைவு பிம்பம் செங்குத்துக் குறுக்குக்கம்பியுடன் ஒன்றினையும் வகையில் அமைத்து அளவீடுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு 2θ வைக் கொடுக்கும். இதன் மதிப்பில் பாதி, முதல் வரிசை பெருமத்திற்கான விளிம்பு விளைவுக் கோணத்தைக் கொடுக்கும் (θ) இது படம் 6.67 -இல் காட்டப்பட்டுள்ளது. ஒளியின் அலைநீளம் பின்வரும் சமன்பாட்டினால் கணக்கிடப்படுகிறது.


இங்கு N என்பது ஒரு மீட்டர் நீளத்தில் வரையப்பட்ட கோடுகளின் எண்ணிக்கையாகும். மேலும் m என்பது விளிம்பு விளைவு பிம்பத்தின் வரிசையாகும்.

கண்கவர் வண்ணங்களில் குறுந்தகடுகள் (Compact disc) தோன்றுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பதிவு செய்யப்பட்டிருக்கும் பளபளப்பான பக்கத்தில் வட்ட வடிவ குறுகிய வெட்டுகள் காணப்படும். இவ்வெட்டுகளின் அகலம் கண்ணுறு ஒளியின் அலைநீளத்துடன் ஒப்பிடத்தக்க அளவில் உள்ளதால், கண்ணுறு ஒளி அலைகள் குறுந்தகடுகளின் இப்பக்கத்தின் மீது பட்டு எதிரொளிக்கும்போது விளிம்பு விளைவு ஏற்பட்டுக் கண்கவர் வண்ணங்களில் குறுந்தகடுகள் தோன்றுகின்றன. பாடல்கள் மற்றும் படங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் பிளவுகள் விளிம்பு விளைவுக் கீற்றணி போன்று செயல்படுகின்றன.



Tags : Diffraction மாறுபாடு.
12th Physics : UNIT 7 : Wave Optics : Experiment to determine the wavelength of monochromatic light Diffraction in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல் : ஒற்றைநிற ஒளியின் அலைநீளத்தைக் காண்பதற்கான சோதனை - மாறுபாடு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்