Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | ஈ. கோலை நகலாக்கத் தாங்கிக் கடத்தி (pBR 322)

மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் - ஈ. கோலை நகலாக்கத் தாங்கிக் கடத்தி (pBR 322) | 12th Botany : Practicals

12 வது தாவரவியல் : செய்முறைகள்

ஈ. கோலை நகலாக்கத் தாங்கிக் கடத்தி (pBR 322)

நோக்கம் : pBR 322 – நகலாக்கத் தாங்கிக் கடத்தியினைக் கண்டறிந்து அதன் பண்புகளைப் படித்தல்

மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள்


சோதனை எண் 10: ஈ. கோலை நகலாக்கத் தாங்கிக் கடத்தி (pBR 322)

நோக்கம் : pBR 322 – நகலாக்கத் தாங்கிக் கடத்தியினைக் கண்டறிந்து அதன் பண்புகளைப் படித்தல்

கொள்கை: தாங்கிக் கடத்தி ஓம்புயிர் செல்லிற்குள் விரும்பத் தகுந்த அயல் DNA-வைக் கடத்திச் சென்று உட்செலுத்துவற்கு பயன்படுத்தப்படுகிறது.

தேவையானவை: நகலாக்க pBR 322 தாங்கிக் கடத்தியின் மாதிரிகள் மாதிரிகள் / புகைப்படங்கள் படங்கள்.


கண்டறியும் பண்புகள்

• pBR 322 பிளாஸ்மிட் ஒரு மறுவடிவமைக்கப்பட்ட பிளாஸ்மிட் ஆகும். இவை 4361 கார இணைகளைக் கொண்டுள்ளது. இது நகலாக்கத் தாங்கிக் கடத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

•PBR-ல் p என்பது பிளாஸ்மிட்டையும், B மற்றும் R முறையே இப்பிளாஸ்மிடை உருவாக்கிய அறிவியல் அறிஞர்களான பொலவர் மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோரையும் குறிப்பிடுகின்றன. 322 என்ற எண் அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இப்பிளாஸ்மிடின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

•இது பல்வேறு தடைக்கட்டு நொதிகளுக்கான அங்கீகரிக்கக்கூடிய கார்பன்கள் மற்றும் இருவேறுபட்ட உயிரி எதிர்ப்பொருட்கள் (Hind III, Eco RI, Bam Hi, Sall, Pvull, Pst I, Clai), Ori மற்றும் தடுப்பிற்கான மரபணுக்களை (ampR and tetR) கொண்டுள்ளது. பிளாஸ்மிட் பெருக்கமடைதல் புரதத்திற்கான Rop குறியீட்டை உள்ளடக்கியது.

Tags : Models / Photographs / Pictures | Botany Practicals மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : E.coli cloning vector (pBR 322) Models / Photographs / Pictures | Botany Practicals in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : ஈ. கோலை நகலாக்கத் தாங்கிக் கடத்தி (pBR 322) - மாதிரிகள் / புகைப்படங்கள் / விளக்கப்படங்கள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்