Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும்

தாவரங்களில் பாலினப்பெருக்கம் - இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும்

ஆண்டு லில்லியம் மற்றும் ஃபிரிட்டிலாரியா தாவரங்களில் ஆண் கேமீட்டகத்திலிருந்து வெளியேறும் இரண்டு ஆண் கேமீட்களும் கருவுறுதலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும் 

S.G. நவாஸின் மற்றும் ட கினார்டு 1898 மற்றும் 1899 - ஆம் ஆண்டு லில்லியம் மற்றும் ஃபிரிட்டிலாரியா தாவரங்களில் ஆண் கேமீட்டகத்திலிருந்து வெளியேறும் இரண்டு ஆண் கேமீட்களும் கருவுறுதலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். அந்த ஆண் கேமீட்கள் கருப்பையிலுள்ள இரண்டு வேறுபட்ட கூறுகளை கருவுறச் செய்கின்றன. இவ்வாறு இரண்டு ஆண் கேமீட்களும் கருவுறுதலில் ஈடுபடுவதால், இந்நிகழ்வு இரட்டைக் கருவுறுதல் (Double fertilization) என்று அழைக்கப்படுகிறது. இது மூடுவிதைத் தாவரங்களின் சிறப்புப் பண்பாகும். இரண்டு ஆண் கேமீட்களில் ஒன்று முட்டை உட்கருவுடன் (syngamy) இணைந்து கருமுட்டை (zygote)- யை உருவாக்குகிறது  

மற்றொரு ஆண் கேமீட் மைய செல்லை நோக்கி நகர்ந்து, அங்குள்ள துருவ உட்கருக்கள் (polar nuclei) அல்லது துருவ உட்கருக்கள் இணைந்து உருவான இரண்டாம் நிலை உட்கருவுடன் இணைந்து முதல்நிலை கருவூண் உட்கரு (primary endosperm nucleus - PEN) வை உருவாக்குகிறது. இந்நிகழ்வில் மூன்று உட்கருக்கள் இணைவதால் இதற்கு மூவிணைதல் (triple fusion) என்று பெயர். இந்நிகழ்வின் முடிவில் கருவூண் உருவாக்கம் நடைபெறுகிறது. கருவூண் வளரும் கருவிற்கு உணவாக உள்ளது.

கருவுறுதலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல் நிலை கருவூண் உட்கரு (PEN - Primary Endosperm Nucelus) உடனடியாக பகுப்படைந்து உருவாகும் திசுகருவூண்திசு என்றழைக்கப்படுகிறது.

வளர்ச்சி முறையைப் பொறுத்து மூடுவிதைத் தாவரங்களில் 3 வகையான கருவூண் திசு அறியப்படுகிறது. அவை உட்கரு சார் கருவூண் திசு (nuclear endosperm), செல்சார் கருவூண் திசு (cellular endosperm), ஹீலோபிய கருவூண் திசு (helobial endosperm) ஆகும் 

Tags : Sexual Reproduction in Plants தாவரங்களில் பாலினப்பெருக்கம்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Double fertilization and triple fusion Sexual Reproduction in Plants in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : இரட்டைக் கருவுறுதலும் மூவிணைதலும் - தாவரங்களில் பாலினப்பெருக்கம் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்