Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம்

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம்

இயற்பியல் : நிலை மின்னியல்: கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம்

கூர்முனைச் செயல்பாடு (Action at points) அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் (Corona discharge)

ஏதேனும் ஒரு வடிவமுள்ள மின்னூட்டம் பெற்ற கடத்தி ஒன்றைக் கருதுவோம் [படம் 1.61 (அ)].


வளைவு ஆரம் குறைவாக பகுதிகளில் மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். கடத்தியில் வளைவுத்தன்மை அதிகமுள்ள (குறைந்த ஆரம்) முனைகளில் மின் துகள்கள் அதிகமாகக் குவிகின்றன [படம் 1.61 (ஆ)]

இதனால் அம்முனைக்கு அருகில் மின்புலம் மிகுந்த வலிமையுடன் உள்ளது. இது அப்பகுதியிலுள்ள காற்றை அயனியாக்கம் செய்கிறது. இப்போது, கூர்முனைக்கு அருகிலுள்ள நேர் மின் துகள்கள் விரட்டப்படுகின்றன, எதிர் மின் துகள்கள் கூர்முனையை நோக்கி கவரப்படுகின்றன. இதனால் கடத்தியின் கூர்முனைப் பகுதியிலுள்ள மின் துகள்களின் மொத்த மின்னூட்ட மதிப்பு குறைகிறது. இதையே கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் என்பர்.

12th Physics : UNIT 1 : Electrostatics : Distribution of charges in Action at points or Corona discharge in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல் : கூர்முனைச் செயல்பாடு அல்லது ஒளிவட்ட மின்னிறக்கம் - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்