நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக | 9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்

வேறுபடுத்துக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : வேறுபடுத்துக.

IV. வேறுபடுத்துக.


1. இயற் சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு.

விடை:

இயற் சிதைவு:

1. இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற்பியல் சிதைவு.

2. பாறை உரிதல், பாறைப் பிரிந்துடைதல் மற்றும் சிதறுதல் மூலம் ஏற்படுகிறது.

வேதியியல் சிதைவு

1. பாறைகளில் இரசாயன மாற்றம் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைதல் இரசாயனச் சிதைவு.

2. ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளினால் ஏற்படுகிறது.

 

2. டெல்டா மற்றும் ஒதபொங்கு முகம்

விடை:

டெல்டா:

1. ஆற்றின் முகத்துவாரங்களில் படிவுகள் முக்கோணவடிவில் படியவைக்கப்படுகின்றன. முக்கோண வடிவ படிவுகளால் ஏற்படும் நிலத்தோற்றம்

2. வண்டல் படிவுகள் மென்மையானதாகவும் தாதுக்கள் நிறைந்ததாகவும்

காணப்படுகிறது. (.கா) காவிரி டெல்டா

ஒதபொங்கு முகம்:

1. ஆறு கடலில் சேருமிடங்களில் உருவாகிறது. படிய. வைத்தல் செயல் கிடையாது..

2. அலைகளின் அரித்தல் காரணமாக இங்கு  டெல்டாக்கள் போல் படிய வைத்தல் நடைபெறாது.  (.கா) நர்மதா, மற்றும் தபதி

 

3. கல்விழுது மற்றும் கல்முளை.

விடை:

கல் விழுது:

1. குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் ஆவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சி அளிக்கும்.

2. இது கல்விழுது என்று அழைக்கப்படுகிறது.

கல்முளை

1. குகைகளின் கூரைகளில் இருந்து ஒழுகும் கால்சியம்  கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது கல் முளை எனப்படும்.

2. இது கல்முளை என்று அழைக்கப்படுகிறது

 

4. நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்கு மணற்குன்று

விடை:

நீண்ட மணற்குன்று:

1. நீண்ட மணல் மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு காணப்படும்.

2. இவை காற்று வீசும் திசைக்கு இணையாகக் காணப்படும்.

குறுக்கு மணற்குன்று  

1. குறுக்கு மணல் மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும்.

2. காற்று வேகமாகவும் மிதமாகவும் மாறி,மாறி ஒரே

திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.

 

5. இன்சல்பர்க் மற்றும் யார்டங்

விடை:

இன்சல்பர்க்

வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும். இவையே இன்சல்பர்க்குகள் ஆகும்.

யார்டங்

வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென்பாறை என மாறி மாறி அமைந்து இருக்கும். இந்த வரிசையில் மென்பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டுவிடும். காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போலக் காணப்படும். இவையே நிலத் தோற்றம் யார்டங்குகள் எனப்படுகின்றன.

 

6. நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு

விடை:

நீண்ட மணல்திட்டு

1. மணல் திட்டின் ஒரு முனை நிலத்தோடு இணைந்தும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும்

2. பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும்

மணல்திட்டு

1. கடற்கரையில் மணற்படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றம்.

2. கடற்கரைக்கு இணையாகக் காணப்படும்.

Tags : Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Geography : Lithosphere – II Exogenetic Processes : Distinguish between Lithosphere – II Exogenetic Processes | Geography | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் : வேறுபடுத்துக - நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் - II புவிப் புறச்செயல்பாடுகள்