Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் | 11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India

11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

பிற பண்பாட்டு மரபுகளைப் போலவே, மதமும் தனித்து இருப்பதில்லை. நிலவும் சூழ்நிலைகளோடு தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் சமூக, ஆன்மிகத் தேவைகளை மதமும் நிறைவு செய்கிறது.

பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்

 

கற்றல் நோக்கங்கள்

கீழ்கண்டவை பற்றி அறிதல்

சமண, பௌத்த மதங்களுக்கு எதிராக ஆதி சங்கரரின் தத்துவக் கோட்பாடு

தென்னிந்தியாவில் மத மறுமலர்ச்சியும், பக்தி இயக்கத்தின் தாக்கமும்

சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையிலான முரண்பாட்டு நிகழ்வுகள் ஒரு புறமும் மறுபுறம் சிரமணப் பிரிவுகளான சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையிலான முரண்பாடுகள்

வடஇந்தியாவின் பக்தி இயக்கத்தில் இரண்டு போக்குகள்: சூபியிஸத்தின் தாக்கம், வங்காளத்து வைணவ இயக்கத்தின் செல்வாக்கு

கபீர், குருநானக், ரவிதாஸ் ஆகியோர் பிரதிநித்துவப்படுத்திய ஒரே கடவுள் இயக்கம். இராமானுஜர் சிந்தனைப் பள்ளியின் சீர்திருத்த அணுகுமுறை

 

 

அறிமுகம்

பிற பண்பாட்டு மரபுகளைப் போலவே, மதமும் தனித்து இருப்பதில்லை. நிலவும் சூழ்நிலைகளோடு தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் சமூக, ஆன்மிகத் தேவைகளை மதமும் நிறைவு செய்கிறது. நீண்ட பண்பாட்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில், மதங்கள் பல்வகைப்பட்ட மரபுகளோடு தொடர்புகொண்டு வளர்ந்துள்ளன. ஆரிய மொழி பேசிய மக்களின் வருகையோடு இந்தியா வந்த வேத மதம் சிந்து நாகரிகத்தின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. ஹரப்பாவில் தாய்த் தெய்வ வழிபாடு தொடங்குகிறது. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிற்பம் சிவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திரன், வருணன், அக்னி ஆகியோரே முக்கிய வேதக் கடவுள்கள் ஆவர். சிவன், விஷ்ணு வழிபாடு பின்னர் வளர்ந்தனவாகும். பொது ஆண்டுக்கு முந்திய முதலாயிரமாண்டின் (கி.மு 1000) இடைப்பகுதியில் சிந்து கங்கைச் சமவெளியில் பௌத்தம், சமணம் எனும் இரு மகத்தான மதங்கள் உருவாயின. (ஆசீவகம் போன்ற ஏனைய புறக்கோட்பாட்டு மதங்கள் போன்றே) இவை வைதீக வேதமத நடைமுறைகளை எதிர்த்தன.

இதைப் போலவே பொது ஆண்டின் முதலாயிரமாண்டின் இடைப்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் பக்தி இயக்கம் எனும் வடிவத்தில் ஓர் உன்னதமான சமய மரபு செழித்தோங்கியது. ஒரு மதக் கோட்பாடான, பக்தியின் பொருள் ஆழமான பற்றுடன் அனைத்துக்கும் மேலான இறைவனைச் சரணடைந்து முக்தி பெறுதலாகும். பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் வலுப்பெற்றது. இக்காலப் பகுதியில்தான் பெளத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்க நெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது என வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர். வேத இறையியல், இவை இரண்டிலிருமிருந்தும் சில கூறுகளை எடுத்து இணைத்துக் கொண்டது. ஆதிசங்கரர் புறமதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்குஅத்வைதம்எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார். அது அறிவார்ந்தவர்களின் நிலையில் செல்வாக்குப்பெற்றது. புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கு ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர். வரலாற்றாய்வாளர்கள் இதனைப் பக்தி இயக்கம் என அழைக்கின்றனர். பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூக, அரசியல், மதம், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் மிக ஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது. இராமானுஜர் போன்ற இறையியலாளர்களால் அது பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ, சித்தாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது. பக்தி வழிபாடு அடியார்கள் கொடுத்த ஊக்கத்தினால் 14ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் பரவியது. நாம் இங்கு பக்தி இயக்கத்தின் பொதுவான கூறுகளையும் அதை முன்னெடுத்த முக்கியமானவர்களையும், அதன் இருவகையான போக்குகளையும் மக்களின் சமூகப் பண்பாட்டு வாழ்வில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பகுத்தாய்வு செய்ய உள்ளோம்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 13 : Cultural Syncretism: Bhakti Movement in India : Cultural Syncretism: Bhakti Movement in India History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 13 : பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம்