Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மரபு மின்னோட்டம்

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மரபு மின்னோட்டம்

ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும் திசையை சுட்டிக்காட்ட அம்புக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மரபு மின்னோட்டம்


ஒரு மின்சுற்றில் மின்னோட்டம் பாயும் திசையை சுட்டிக்காட்ட அம்புக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. மரபுப்படி, மின்சுற்றில் மின்னோட்டம் நேர்மின்வாயிலிருந்து எதிர்மின்வாயுக்கு பாயும். இந்த மின்னோட்டமே மரபு மின்னோட்டம் அல்லது மின்னோட்டம் எனப்படும். இம்மரபு மின்னோட்டத்தின் திசையே சோதனை நேர்மின்துகள் (Positive test charge) செல்லும் திசையாகும். ஆனால் மின்சுற்றுகளில் உண்மையில் எலக்ட்ரான்களே எதிர்மின்வாயிலிருந்துநேர்மின்வாய்க்கு பாய்கின்றன. எனவே எலக்ட்ரான்கள் செல்லும் திசையும், மரபு மின்னோட்டத்தின் திசையும் எதிர் எதிர்த்திசையில் படம் 2.3 இல்உள்ளவாறு அமைகின்றன.

கணித ரீதியாக பார்த்தால் நேர்மின் துகள்கள் திசையில் செல்வது அதற்குச் சமமான மின்னூட்டம் கொண்ட எதிர்மின் துகள்கள் எதிர்த்திசையில் செல்வதற்குச் சமமாகும்.

12th Physics : UNIT 2 : Current Electricity : Conventional Current in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : மரபு மின்னோட்டம் - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்